

தேனியில் ஜூலை.14ம் தேதி நடைபெறவிருந்த அதிமுக மாவட்ட ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் தலைமை தெரிவித்துள்ளது. ஒத்திவைக்கப்பட்ட ஆலோசடைக் கூட்டம் ஜூலை.28 நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் 'எடப்பாடி கே. பழனிசாமி ஆணைக்கிணங்க, அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் இணைந்து செயல்பட்டு வரும் போக்குவரத்துப் பிரிவு, மின்சாரப் பிரிவு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் செயல்பட்டு வரும் அண்ணா தொழிற்சங்கங்கள் மற்றும் இணைப்புச் சங்கங்களின் செயல்பாடுகள் குறித்தும், தொழிற்சங்க வளர்ச்சிப் பணிகள் குறித்தும்,
‘கழக அண்ணா தொழிற்சங்க வளர்ச்சிப் மாவட்ட ஆலோசனைக் கூட்டங்கள்’ கடந்த 29.6.2026 முதல் 20.7.2026 வரை, நடைபெறுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், 14.7.2026 அன்று பிற்பகல் 3 மணியளவில் தேனியில் நடைபெறுவதாக இருந்த தேனி கிழக்கு, தேனி மேற்கு ஆகிய மாவட்டங்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மட்டும் ஒத்திவைக்கப்பட்டு, வருகின்ற 28.7.2026 - செவ்வாய் கிழமை அன்று காலை 10 மணியளவில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த ஆலோசனைக் கூட்டம், அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் பெல். இரா. தமிழரசன் தலைமையிலும், அண்ணா தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெறும்.
ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ள தேனி கிழக்கு, தேனி மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த, அண்ணா தொழிற்சங்கப் பேரவை பிரிவு நிர்வாகிகள், மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள்;
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தங்கள் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இணைப்புச் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் அனைவருக்கும் தகவல் தெரிவித்து, அவர்கள் அனைவரும் ஆலோசனைக் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ளும் வகையில் உரிய ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும்.
இந்த ஆலோசனைக் கூட்டம் சிறப்பான முறையில் நடைபெறுவதற்கு, சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.