திருச்செந்தூர் விடுதியில் சென்னையை சேர்ந்த பக்தர் திடீர் மரணம்

திருச்செந்தூர் விடுதியில் சென்னை திருவெற்றியூரை சேர்ந்த பக்தர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

திருச்செந்தூர்:

சென்னை திருவெற்றியூர் சேசாசன் கிராமினி தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (வயது56).

இவர் திருச்செந்தூர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய கடந்த 15-ந்தேதி வந்தார். பின்னர் அவர் கோவில் அருகே உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினார்.

இந்நிலையில் நேற்று வெகு நேரமாக அவரது அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விடுதி ஊழியர்கள் கதவை தட்டினர். திறக்காததால் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது குணசேகரன் மயங்கிய நிலையில் கிடந்தார்.

உடனே அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பான புகாரின் பேரில் திருச்செந்தூர் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குணசேகரன் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com