வ.உ.சிதம்பரனாரின் தேசப்பற்றை போற்றி வணங்குகிறேன்- முதலமைச்சர்

செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளில் அவர்தம் தேசப்பற்றை போற்றி வணங்குகிறேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை:

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, இந்தியாவின் முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தை சுதேசியாக தொடங்கிய ஒழுக்கமும், நேர்மையும் கொண்ட ஆற்றல்மிகு வீரத்திருமகனார். செக்கிழுத்தச் செம்மல் ஐயா வ.உ.சிதம்பரனார் பிள்ளை அவர்களின் நினைவு நாளில் அவர்தம் தேசப்பற்றை வணங்கி போற்றுகிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com