

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சூரப்பாவின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 11-ந் தேதியுடன் நிறைவு பெற்றது.
இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக அதே பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்த டாக்டர் ஆர்.வேல்ராஜை நியமித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
டாக்டர் ஆர்.வேல்ராஜ், துணைவேந்தராக 3 ஆண்டுகள் பதவி வகிப்பார் என கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்...தமிழக சட்டசபை 29 நாட்கள் நடக்கிறது- சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு