ஆலங்குளத்தில் கள் விற்றவர் கைது

ஆலங்குளத்தில் கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கை
கை
Published on

நெல்லை:

ஆலங்குளம் அருகே உள்ள கீழ இலந்தகுளம் நடுத் தெருவை சேர்ந்தவர் சந்தியாகப்பன் (வயது52). இவர் நேற்று ஓடை மறிச்சான்- உடையாம் புளி சாலையில் தனது மொபட்டில் வைத்து கள் விற்பனை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த ஆலங்குளம் போலீசார் அவரை பிடித்து சோதனை செய்ததில் அவர் கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 5 லிட்டர்கள், ரூ.1,920 பணம் மற்றும் மொபட்டை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com