காஷ்மீரில் ராணுவத்துக்கு உதவியாக வருகிறது அதிநவீன ரோபோ படை

ஜம்மு காஷ்மீரில் கல்வீசி தாக்குதல் நடத்தும் போராட்டக்காரர்களுக்கும், ஊடுருவும் தீவிரவாதிகளுக்கும் பதிலடி கொடுப்பதற்காக ராணுவத்திற்கு உதவியாக விரைவில் ரோபோக்கள் வரவழைக்கப்படுகின்றன.
காஷ்மீரில் ராணுவத்துக்கு உதவியாக வருகிறது அதிநவீன ரோபோ படை
Published on

புதுடெல்லி:

ஜம்மு-காஷ்மீரில் எல்லையில் தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்கவும், பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல்களை ஒடுக்கவும் நம் ராணுவ வீரர்கள் இரவு பகலாக போராடி வருகின்றனர். இதேபோல் காஷ்மீரில் கல்வீசி தாக்கும் போராட்டக்காரர்களால் ராணுவ வீரர்கள் பலர் காயமடைகின்றனர். இதனால் ஏற்படும் உயிர்சேதங்கள் மற்றும் காயமடைவதை குறைக்கும் வகையில், பாதுகாப்பு பணிகளுக்காக எல்லையில் இந்தியா அதிஉயர்-தொழில்நுட்ப திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு உள்ளது. இதற்காக ரோபோக்களை பயன்படுத்த இந்திய ராணுவம் திட்டமிட்டிருந்தது.

இதையடுத்து ரோந்து பணிகள் மேற்கொள்வது, வெடிபொருட்களை கொண்டு செல்வது உள்ளிட்ட பணிகளுக்காக மொத்தம் 544 ரோபோக்கள் தேவைப்படுவதாக இந்திய ராணுவம் கோரிக்கை வைத்துள்ளது. இதற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கண்காணிப்பு கேமராக்கள், டிரான்ஸ்மிட்டர் கருவிகள் பொருத்தப்பட்டு பயன்படுத்தப்படவுள்ள இந்த ரோபோக்கள் ராணுவத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com