4500 மாணவர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய அசோக சக்கரம்- உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது

தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு அசோக சக்கரா என்ற உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.அசோக சக்கரத்தை அமெரிக்க உலக சாதனை குழுமத்தின் அதிகாரி பார்வையிட்டார்.
4500 மாணவர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய அசோக சக்கரம்.
4500 மாணவர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய அசோக சக்கரம்.
Published on

புதுச்சேரி:

புதுவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு அசோக சக்கரா என்ற உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் அக்கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகள் 4,500 பேர் பங்கேற்று தேசிய கொடியில் உள்ள அசோக சக்கரத்தை உருவாக்கினர். இது உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.

மாணவ-மாணவிகள் ஒன்று சேர்த்து உருவாக்கிய அசோக சக்கரத்தை அமெரிக்க உலக சாதனை குழுமத்தின் அதிகாரி கிறிஸ்டோபர் டெய்லர் கிராப்ட் பார்வையிட்டு அதிகாரபூர்வமாக பதிவு செய்து அதற்கான சான்றிதழை வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com