

தமிழக மக்களின் பேராதரவை பெற்ற மக்கள் தலைவராக தமிழக முதலமைச்சர் விஜய் உள்ளார் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா புகழாரம் சூட்டி உள்ளார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு இன்று முன்னாள் பிரதமர் தேவகவுடா சாமி தரிசனம் செய்ய வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. அதன்பின்னர் அவர் கோவி லுக்குள் சென்று சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தார்.
அதனை தொடர்ந்து முன்னாள் பிரதமர் தேவகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக மக்களின் பேராதரவை பெற்ற மக்கள் தலைவராக தமிழக முதலமைச்சர் விஜய் உள்ளார். ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரின் ஆதரவையும் அவர் பெற்றுள்ளார்.
கர்நாடகாவில் தற்போது கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கர்நாடகாவில் நிலவும் வறட்சியான நிலையை தமிழக தலைவர்கள் உணர்ந்துள்ளனர்.
காவிரி விவகாரத்தில் தமிழகம்-கர்நாடகம் ஆகிய 2 மாநில அரசுகளும் சுமூகமாக பேசி தீர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.