45 நாட்களில் இல்லாத அளவில் கொரோனா தினசரி பாதிப்பு 27,409 ஆக குறைந்தது

இந்தியாவில் தினசரி பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இன்று காலை நிலவரப்படி 4.23 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்று
கொரோனா தொற்று
Published on

இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,409 பேர் பாதிக்கபட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நேற்று முன்தின பாதிப்பு 34,113 ஆக இருந்தது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 20 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 26 லட்சத்து 92 ஆயிரத்து 943 ஆக உயர்ந்தது. 45 நாட்களில் இல்லாத அளவில் சரிவு

கடந்த டிசம்பர் 31-ந் தேதி நிலவரப்படி பாதிப்பு 22,775 ஆக இருந்தது. அதன்பிறகு தொடர்ந்து பாதிப்பு அதிகரித்த நிலையில் நேற்றைய பாதிப்பு கடந்த 45 நாட்களில் இல்லாத அளவில் மீண்டும் சரிந்துள்ளது.

தினசரி பாதிப்பு விகிதம் 3.19 சதவீதத்தில் இருந்து 2.23 ஆகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 3.99 சதவீதத்தில் இருந்து 3.63 ஆகவும் குறைந்துள்ளது.

நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 8,989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மிசோரத்தில் 2,022, மராட்டியத்தில் 1,966, கர்நாடகாவில் 1,568, தமிழ்நாட்டில் 1,634, உத்தரபிரதேசத்தில் 1,233, ராஜஸ்தானில் 1,102, குஜராத்தில் 1,040, மத்தியபிரதேசத்தில் 1,760 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட மரணங்களையும் சேர்த்து 178 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 347 பேர் இறந்துள்ளனர்.

மொத்த பலி எண்ணிக்கை 5,09,358 ஆக உயர்ந்தது. இதில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 1,43,416 பேரும், கேரளாவில் 62,377 பேரும் அடங்குவர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரேநாளில் 82,817 பேர் மீண்டு வீடு திரும்பினர். இதுவரை குண மடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 17 லட்சத்து 60 ஆயிரத்து 458ஆக உயர்ந்தது.

தற்போது ஆஸ்பத்திரி களில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 4,23,127 ஆக சரிந்துள்ளது. இதில் நேற்று முன்தினத்தை விட 55,755 குறைவாகும்.

நாடு முழுவதும் நேற்று 44,68,365 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 173 கோடியே 42 லட்சத்தை கடந்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி நேற்று 12,29,536 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 75.30 கோடியாக உயர்ந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com