வெங்காயத்திற்கு 40 சதவீதம் ஏற்றுமதி வரி விதிப்பு - மத்திய அரசு

வெங்காயம் மீதான ஏற்றுமதி வரி 40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்றுமதி வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெங்காயத்திற்கு 40 சதவீதம் ஏற்றுமதி வரி விதிப்பு - மத்திய அரசு
Published on

புதுடெல்லி:

கடந்த சில வாரங்களாகவே வெங்காயத்தின் விலை அதிகரித்து வந்தது. வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பண்டிகை காலம் என்பதால் வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது

இந்நிலையில், விலை உயர்வைக் கட்டுப்படுத்த வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரியை உயர்த்தியுள்ளது மத்திய அரசு.

உள்நாட்டில் வெங்காய விநியோகத்தை மேம்படுத்துவதற்காகவும் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெங்காயம் மீதான இந்த ஏற்றுமதி வரி விதிப்பு வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

X

Maalai Malar
www.maalaimalar.com