

இந்தியாவின் முன்னாள் முதலமைச்சரும், ‘கல்வி கண் திறந்தவர்’ என்று அழைக்கப்படுபவருமான பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. காமராஜர் 1903-ம் ஆண்டு ஜூலை 15-ந்தேதி விருதுநகரில் பிறந்தார். ஏழை குழந்தைகளின் கல்விக்காக மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய இவரது பிறந்தநாள், தமிழ்நாட்டில் 'கல்வி வளர்ச்சி நாளாக' கொண்டாடப்படுகிறது.
காமராஜரின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறோம்.
இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கியத் தலைவராகவும், சிறந்த பொதுவாழ்வு ஆளுமையாகவும் திகழ்ந்த அவர், தனது வாழ்வை தேசக் கட்டமைப்பிற்காக அர்ப்பணித்தார். கல்வி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் பின்தங்கிய மக்களின் நலன் அவர் கொண்டிருந்த உறுதியான அர்ப்பணிப்பு, தலைமுறைகளுக்கு தொடர்ந்து வழிகாட்டியாக உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.