பிரதமர் குடிக்கும் தண்ணீரில் அரியானா பாஜக அரசு விஷம் கலக்குமா? - கெஜ்ரிவாலுக்கு மோடி பதிலடி

டெல்லி தேர்தலை ஒட்டி அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.யமுனை நதியில் அரியானா பாஜக அரசு நச்சு கலப்பதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டி இருந்தார்.
பிரதமர் குடிக்கும் தண்ணீரில் அரியானா பாஜக அரசு விஷம் கலக்குமா? - கெஜ்ரிவாலுக்கு மோடி பதிலடி
Published on

டெல்லியில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் அவர் யமுனை நதியில் அரியானா மாநில பாஜக அரசு நச்சு கலப்பதாக குற்றம் சாட்டி இருந்தார். இதுகுறித்து பாஜக நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் தேர்தல் ஆணையம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், இத்தகைய குற்றச்சாட்டுகள் இரு மாநிலங்களுக்கும் இடையேயான உறவை பாதிக்கக்கூடும். எனவே புகாருக்குரிய ஆதாரங்களுடன் இன்றிரவு 8 மணிக்குள் கெஜ்ரிவால் தனது பதிலை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று டெல்லியில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "பிரதமர் குடிக்கும் தண்ணீரில் அரியானா பாஜக அரசு விஷம் கலக்குமா? கெஜ்ரிவாலின் இந்த குற்றசாட்டு அரியானாவை மட்டுமில்ல ஒட்டுமொத்த இந்தியாவையும் அவமானப்படுத்தியுள்ளது. தண்ணீர் கொடுப்பதை நம் நட்டு மக்கள் நல்ல காரியமாக கருதுகிறார்கள். தோல்வி பயத்தால் அவர்கள் இப்படி உளறுகிறார்கள். இப்படி பேசுபவர்களுக்கு டெல்லி மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று நான் நம்புகிறேன்.

25 ஆண்டுகளாக காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளை பார்த்துவிட்டீர்கள். இப்போது உங்களுக்காக பணியாற்ற மோடிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். உங்களை குடும்பத்தைப்போல பார்த்துக்கொள்கிறேன். உங்களின் கனவு இனி எனதாக இருக்கும். கனவுகளை நிறைவேற்ற வலிமையை தாருங்கள்" என்று தெரிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com