நீதித்துறை அதிகாரிகள் சிறைபிடிப்பு.. மம்தா அரசை விளாசிய உச்சநீதிமன்றம் - மத்திய படைகளை நிலைநிறுத்த உத்தரவு | SIR

இந்தச் சம்பவம் தற்செயலானது அல்ல, இது தேர்தல் அதிகாரிகளை அச்சுறுத்தவும், தேர்தல் நடைமுறையைச் சீர்குலைக்கவும் செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட மற்றும் தூண்டப்பட்ட முயற்சி
நீதித்துறை அதிகாரிகள் சிறைபிடிப்பு.. மம்தா அரசை விளாசிய உச்சநீதிமன்றம் - மத்திய படைகளை நிலைநிறுத்த உத்தரவு | SIR
Published on

மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் தங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டி வருகின்றனர்.

சம்பவம்

இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் நேற்று வாக்காளர் பட்டியல் மறுஆய்விற்கு வந்த ஏழு நீதித்துறை அதிகாரிகளை 9 மணி நேரத்திற்கும் மேலாகப் சிறைபிடித்து வைத்திருந்துள்ளனர்.

இரவு 1 மணியளவில் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போராட்டக்காரர்களைக் கலைத்து, நீதித்துறை அதிகாரிகளை மீட்டுப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

நீதித்துறை அதிகாரிகள் மீட்கப்பட்டபோது அவர்கள் வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில் நீதித்துறை அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்தை உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.

கண்டனம்

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகக் குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், தேர்தல் திருத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு அளிக்க உடனடியாக CISF உள்ளிட்ட மத்திய பாதுகாப்பு படைகளை நிலைநிறுத்த உத்தரவிட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தற்செயலானது அல்ல, இது தேர்தல் அதிகாரிகளை அச்சுறுத்தவும், தேர்தல் நடைமுறையைச் சீர்குலைக்கவும் செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட மற்றும் தூண்டப்பட்ட முயற்சி என்று நீதிமன்றம் சாடியுள்ளது.

அதிகாரிகளைப் பாதுகாக்கத் தவறியது கடமையிலிருந்து நழுவுவதாகும் என்று கூறிய நீதிமன்றம், மாநில அரசின் செயலற்ற தன்மைக்கு விளக்கம் கேட்டுள்ளது.

இந்தச் சம்பவத்திற்குப் விளக்கம் அளிக்கக் கோரி, மேற்கு வங்க தலைமைச் செயலாள மற்றும் டிஜிபி ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மால்டா சம்பவத்தின் பின்னணியில் உள்ள சதியைத் கண்டறிய சிபிஐ அல்லது என்ஐஏ விசாரணை கோரத் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மறுபுறம், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு எதிராகவும், அதிகாரிகளின் இடமாற்றத்தைக் கண்டித்தும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நீதித்துறை அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் முற்றிலும் பாஜகவின் சதிவேலை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com