SIR-இல் பெயர் நீக்கம்.. நீதித்துறை அதிகாரிகளை 9 மணிநேரம் சிறைபிடித்த மக்கள் | West bengal

நீதித்துறை அதிகாரிகள் மீட்கப்பட்டபோது அவர்கள் வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
SIR-இல் பெயர் நீக்கம்.. நீதித்துறை அதிகாரிகளை 9 மணிநேரம் சிறைபிடித்த மக்கள் | West bengal
Published on

மேற்கு வங்கத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தில் தேர்தல் ஆணையத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அம்மாநில திரிணாமுல் அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

இரு தரப்பும் ஒருவர் மீதொருவர் நம்பிக்கை அற்று இருப்பதால் இதை சிறப்பு வழக்காக கருதி வாக்காளர் பட்டியலை மறுபரிசீலனை செய்ய மாவட்ட நீதித்துறை அதிகாரிகளை நியமிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

போராட்டம்

மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் தங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் நேற்று வாக்காளர் பட்டியல் மறுஆய்விற்கு வந்த ஏழு நீதித்துறை அதிகாரிகளை வாக்காளர்கள் 9 மணி நேரத்திற்கும் மேலாகப் சிறைபிடித்து வைத்திருந்துள்ளனர்.

இரவு 1 மணியளவில் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போராட்டக்காரர்களைக் கலைத்து, நீதித்துறை அதிகாரிகளை மீட்டுப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

நீதித்துறை அதிகாரிகள் மீட்கப்பட்டபோது அவர்கள் வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையரிடம் தேர்தல் ஆணையம் அறிக்கை கோரியுள்ளது.

இதற்கிடையே மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு நடைபெற்று முடிந்த வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் 58 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக 24 பர்ஹானாஸ் மாவட்டத்தில் உள்ள வடக்கு பசீர்ஹாட் தொகுதியில் ஒரே வாக்குச்சாவடியில் இஸ்லாமியரான வாக்குச்சாவடி நிலை அலுவலர் உட்பட அங்குள்ள 300 க்கும் மேற்பட்ட முஸ்லீம் வாக்காளர்கள் பெயர்கள் நீட்டகப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அம்மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 63 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com