மேற்கு வங்கம்: ஒரே வாக்குச்சாவடியில் அனைத்து முஸ்லீம் வாக்காளர்கள் பெயர்களும் நீக்கம் | SIR

நடந்து முடிந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் 76 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
மேற்கு வங்கம்: ஒரே வாக்குச்சாவடியில் அனைத்து முஸ்லீம் வாக்காளர்கள் பெயர்களும் நீக்கம் | SIR
Published on

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதற்கட்ட சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ளது.

அங்கு அண்மையில் நடந்து முடிந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் 76 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. நீக்கப்பட்டுள்ளன. 28 ஆயிரம் வாக்குகள் பரிசீலனை பட்டியலில் உள்ளது.

இந்த சூழலில் மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பசீர்ஹாட் தொகுதியில் போரோ கோப்பரா கிராமத்தில் உள்ள 5 ஆம் எண் வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள் அனைவரின் வாக்குகளும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

அந்த வாக்குச்சாவடியில் மொத்தம் 992 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இதில் 38 பெயர்கள் இறப்பு அல்லது இடம் பெயர்தல் காரணமாக நீக்கப்பட்டன. மீதமுள்ளவர்களில் 358 பேர் தகுதியை நிரூபிக்க விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.

இதில் 18 பேரின் பெயர்கள் மட்டுமே சரிபார்க்கப்பட்டு பட்டியலில் சேர்க்கப்பட்டன. மீதமுள்ள 340 வாக்காளர்களின் பெயர்களும் (அனைவரும் முஸ்லிம்கள்) கடந்த திங்கட்கிழமை வெளியான துணைப் பட்டியலில் இருந்து மொத்தமாக நீக்கப்பட்டுள்ளன.

அதே வாக்குச்சாவடியில் பணியாற்றும் பூத் நிலை அலுவலரான முகமது ஷபியுல் ஆலம் என்பவரது பெயரும் நீக்கப்பட்ட பட்டியலில் உள்ளது.

தேர்தல் ஆணையம் 11 வகை ஆவணங்களில் ஏதாவது ஒன்றைச் சமர்ப்பிக்கக் கோரிய நிலையில், பலர் 3 அல்லது 4 ஆவணங்களைச் சமர்ப்பித்தும் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கானோர் பெயர்கள் பட்டியலில் இருந்து மாயமாகி உள்ளது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தங்கள் பெயர்கள் பட்டியலில் இல்லாததை கண்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குரிமையை பறிக்கத் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்று ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இது நடந்திருக்கலாம் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முழுமையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.

இதற்கிடையே மக்கள் சாலை மாறியலால் அங்கு பதற்றம் நிலவி வருவதால், காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com