வாஸ்கோடகாமா ரெயிலின் ஏசி பெட்டிக்குள் புகுந்த பாம்பு.. அச்சமடைந்த பயணிகள் - வீடியோ

ரெயிலில் பாம்பு இருந்ததை வீடியோ எடுத்த நபர் ஒருவர் அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.ரெயில் பாம்பு இருந்தது தொடர்பான புகாருக்கு ரெயில்வே துறை பதில் அளித்துள்ளது.
வாஸ்கோடகாமா ரெயிலின் ஏசி பெட்டிக்குள் புகுந்த பாம்பு.. அச்சமடைந்த பயணிகள் - வீடியோ
Published on

ஜார்க்கண்டில் இருந்து கோவா நோக்கிச் சென்ற வாஸ்கோடகாமா வாராந்திர விரைவு ரெயிலின் ஏசி பெட்டியில் பாம்பு இருந்ததை கண்டு பயணிகள் அச்சமடைந்தனர். பின்னர் பாம்பு பத்திரமாக பிடிக்கப்பட்டு ரெயிலில் இருந்து அகற்றப்பட்டது.

ரெயிலில் பாம்பு இருந்ததை வீடியோ எடுத்த நபர் ஒருவர் அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரில் ரெயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை அவர் டேக் செய்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் தீர்வு காணப்படும் என்று இந்த புகாருக்கு ரெயில்வே துறை பதில் அளித்துள்ளது.

இதே போல கடந்த மாதம் , ஜபல்பூரில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற கரீப் ரதம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பாம்பு இருந்ததை கண்டு பயணிகள் அச்சமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com