மன் கி பாத்தில் லதா மங்கேஷ்கருடன் உரையாடிய பிரதமர் மோடி

மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் 90-வது பிறந்தநாளில் அவருடன் உரையாடினார்.
பிரதமர் மோடி, லதா மங்கேஷ்கர்
பிரதமர் மோடி, லதா மங்கேஷ்கர்
Published on

புதுடெல்லி:

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் இன்று உரையாற்றினார். அப்போது அவர் பிரபல பாடகி லதா மங்கேஷ்கரை தொடர்பு கொண்டு பேசினார்.

லதா மங்கேஷ்கரின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, அவரை கவுரவிக்கும் விதமாக உரையாடினார்.

மேலும், அவர் பேசுகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது கடவுள் லட்சுமியை புதிய வழியில் வரவேற்போம். இந்த ஆண்டு நமது மகள்களை பெருமைப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வோம். சாதனை படைத்த பெண்களை கவுரவிக்க வேண்டும். அவர்களின் திறமை, வலிமையை நாரிசக்தி என்ற பெயரில் கொண்டாடுவோம் என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com