நாமக்கல்லில் இருந்து குமரிக்கு 1 லட்சம் முட்டைகள் வந்தது- அம்மா உணவகத்தில் வழங்க ஏற்பாடு

நாமக்கல்லில் இருந்து லாரி மூலமாக 1 லட்சம் முட்டைகள் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த முட்டைகளை அம்மா உணவகத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முட்டைகள்
முட்டைகள்
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் வடசேரி பஸ் நிலையம், ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரி ஆகிய 2 இடங்களில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. கொரோனா தடை உத்தரவால் உணவகங்கள் மூடப்பட்டதையடுத்து அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகள் தன்னார்வலர்கள் மூலமாக ஏழை, எளியவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டதையடுத்து அங்கிருந்த அம்மா உணவகம் மூடப்பட்டது.

மூடப்பட்ட அம்மா உணவகத்தில் இருந்த ஊழியர்கள் நாகர்கோவிலில் உள்ள மண்டபத்தில் வைத்து உணவு தயாரித்து ஆதரவற்றோர்களுக்கு வழங்கி வருகிறார்கள். தற்போது அம்மா உணவகம் மூலமாக காலை, மாலை, இரவு நேரங்களில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

அம்மா உணவகத்தில் வழங்கப்பட்டு வரும் உணவுடன் முட்டையும் சேர்த்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து நாமக்கல்லில் இருந்து லாரி மூலமாக 1 லட்சம் முட்டைகள் இன்று நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

முட்டை கொண்டு வந்த வாகனத்திற்கு கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. பின்னர் முட்டைகள் இறக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். முட்டைகள் இறக்கப்பட்டு அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்த முட்டைகளை அம்மா உணவகத்தில் மட்டுமின்றி லாக்டவுண் செய்யப்பட்ட பகுதியிலும் வழங்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com