கருணாநிதி பிறந்த நாள்: திருவாரூர் ஓட்டலில் வாடிக்கையாளர்களுக்கு இலவச உணவு-1 ரூபாய்க்கு டீ

கருணாநிதி பிறந்த நாளையொட்டி திருவாரூர் புலிவலம் பெருமாள்கோவில் அருகில் உள்ள ஒட்டலில் வாடிக்கையாளர்களுக்கு இலவச உணவு மற்றும் 1 ரூபாய்க்கு டீ வழங்கப்பட்டது.
கருணாநிதி பிறந்த நாள்: திருவாரூர் ஓட்டலில் வாடிக்கையாளர்களுக்கு இலவச உணவு-1 ரூபாய்க்கு டீ
Published on

திருவாரூர்:

திருவாரூர் புலிவலம் பெருமாள்கோவில் அருகில் ஓட்டல் நடத்தி வருபவர் கார்த்திக் இவர் தி.மு.க தலைவர் கருணாநிதியின் 94 -வது பிறந்த நாளையொட்டி தனது கடைக்கு வாடிக்கையாளர்களுக்கு இன்று இலவச உணவு வழங்கினார். மேலும் 1 டீ ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்தார். இதனால் அவர் கடையில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இது தொடர்பாக ஓட்டல் உரிமையாளர் கார்த்திக்கிடம் கேட்ட போது தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.ஆக உள்ளார். அவர் முதல்-அமைச்சராக இருந்து நாட்டு வளர்ச்சிக்கு உழைத்துள்ளார். மேலும் திரைப்படத் துறை மற்றும் இலக்கிய பணிகளில் யாரும் செய்ய முடியாத சாதனைகளை அவர் செய்துள்ளார். எனவே அவரது பிறந்த நாளில் எனது மகிழ்ச்சியை வெளிபடுத்தும் வகையில் இலவச உணவு மற்றும் ஒரு ரூபாய்க்கு டீ வழங்குகிறேன் என்று கூறினார். இவர் தி.மு.க வர்த்தக அணி அமைப்பாளராக உள்ளார். கார்த்திக் கடந்த 7 ஆண்டுகளாக கருணாநிதி பிறந்த நாள் அன்று ஒரு ரூபாய்க்கு டீ வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

இவரது கடைக்கு அருகே கருணாநிதி பெயரில் டீக்கடை நடத்தி வரும் சாதிக் என்பவரும் இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி வாடிக்கையாளர்களுக்கு ஒரு டீ ஒரு ரூபாய் என்ற சலுகை விலையில் டீ வழங்கினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com