ஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதலில் 14 பேர் பலி

ஈராக்கில் பெண் போல வேடம் அணிந்த தற்கொலைப்படை பயங்கரவாதி திடீர் தாக்குதல் நடத்தினார். இதில் 14 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதலில் 14 பேர் பலி
Published on

பாக்தாத்:

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கைலோ 60 என்ற இடம் உள்ளது. யூப்ரடீஸ் ஆற்று பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து இடம்பெயர்ந்தோர் இங்கு வசித்து வருகின்றனர். இங்கு பெண் போல வேடம் அணிந்த தற்கொலைப்படை பயங்கரவாதி திடீர் தாக்குதல் நடத்தினார். இதில் 14 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பு ஏற்றுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈராக் ராணுவத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்டு உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com