குஜராத்: ரசாயன ஆலையில் திடீர் தீவிபத்து

குஜராத் மாநிலத்தில் உள்ள ரசாயன ஆலையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் புகை மூட்டம் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டனர்.
குஜராத்: ரசாயன ஆலையில் திடீர் தீவிபத்து
Published on

வதோதரா:

குஜராத் மாநிலத்தில் உள்ள ரசாயன ஆலையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் புகை மூட்டம் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டனர்.

குஜராத் மாநிலம் வதோதரா அருகே மஞ்சுசார் தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இந்த ரசாயன ஆலையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தால் அந்தப் பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

தகவலறிந்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயை அணைக்கும் பணியில் 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டன.

சுமார் மூன்றரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. தீ விபத்தில் ஏற்பட்ட சேத விவரங்கள் தெரியவில்லை. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com