மகாராஷ்டிரா - ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி

மகாராஷ்டிராவின் துலே பகுதியில் செயல்பட்டு வரும் ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட ரசாயன ஆலை
தீ விபத்து ஏற்பட்ட ரசாயன ஆலை
Published on

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டத்தின் ஷிர்பூர் பகுதியில் ரசாயன ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று காலை அந்த ஆலையில் 100க்கு மேற்பட்டோர் வேலை செய்து கொண்டிருந்தனர்.

காலை 11 மணியளவில் அந்த ஆலையில் கேஸ் சிலிண்டர்கள் வெடித்து திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பற்றியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது.

இந்த தீ விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 40க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சுமார்15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் போராடி தீயை அணைத்தன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com