நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 50 காசுகள் உயர்வு

தமிழகத்தில் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டதால் முட்டையின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 50 காசுகள் உயர்ந்துள்ளது.
நாமக்கல் முட்டை
நாமக்கல் முட்டை
Published on

நாமக்கல்:

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக்கூட்டம் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. இதில் கெரோனா பீதி குறைந்து முட்டை வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டதால் முட்டையின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

இதனால் பிற மண்டலங்களின் விலையேற்றத்தாலும், நாமக்கல் மண்டலத்தில் ஒரு முட்டைக்கான பண்ணை கொள்முதல் விலை மேலும் 50 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.2.75 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இதே போல பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ.55 ஆக உயர்வடைந்துள்ளது குறிப்பிடதக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com