சட்டசபையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு

எம்.எல்.ஏ. சம்பள உயர்வு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர். #TNAssembly #MKStalin
சட்டசபையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு
Published on

சென்னை:

தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரில் இன்று எம்.எல்.ஏக்களின் ஊதிய உயர்வு தொடர்பான மசோதாவை பேரவையில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தாக்கல் செய்தார். அதன்படி எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் 55 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 லட்சத்து ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த மசோதா நிறைவெறினால் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் வரையிலான மூன்று லட்சம் ரூபாய் நிலுவைத்தொகை கிடைக்கும்.

இந்நிலையில், குட்கா விவகாரம் தொடர்பாக சட்டசபையில் கேள்வி எழுப்ப ஸ்டாலின் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி அளிக்க மறுத்துள்ளார். இதை கண்டித்தும், எம்.எல்.ஏ. சம்பள உயர்வு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபையில் இருந்து வெளியேறிய ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், குட்கா விவகாரம் குறித்து விசாரித்துவந்த கண்காணிப்பு ஆணையர் ஜெயக்கொடியை மாற்றியது ஏன்? என கேள்வி எழுப்பினார். அதோடு போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறித்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் எம்.எல்.ஏ.க்களில் சம்பள உயர்வை அமல்படுத்தக்கூடாது எனவும் அவர் கூறினார். #TNAssembly #MKStalin #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com