

சங்கரன்கோவில்:
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதிலிருந்து பொதுமக்களை காக்கும் பொருட்டு தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சங்கரன்கோவிலில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீர், மோர் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சங்கரன்கோவில் பஸ் நிலையம் அருகே நடந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நீர், மோர், பழங்கள் ஆகியவற்றை வழங்கினார். மேலும் வெயில் காலம் முடியும் வரை தினமும் நீர், மோர், பழங்கள் வழங்கப்படும் என ராஜா எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
இதில் மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, நகர அவைத் தலைவர் முப்பிடாதி, இளைஞர் அணி சரவணன், நகர துணை செயலாளர்கள் கே.எஸ்.எஸ்.மாரியப்பன், முத்துக்குமார், வக்கீல் சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.