ஆத்தூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புதுமாப்பிள்ளை பலி

ஆத்தூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புதுமாப்பிள்ளை பலியானார்.
இறந்த புது மாப்பிள்ளை
இறந்த புது மாப்பிள்ளை
Published on

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் தனபால் (வயது 35). இவர் ஆத்தூர் புறவழிச்சாலையில் மூங்கில் மண்டி நடத்தி வருகிறார். 

இவர் வீட்டிலிருந்து கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆத்தூர் புறவழிச்சாலையில் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது.

 இதில் தனபால் சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. அவரது மனைவி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். 

அவர் கணவனின் உடலை பார்த்து கதறி அழுதார்.  சாலை விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com