சேலத்தில் நூதன முறையில் 2 பேரிடம் ரூ.4 லட்சம் மோசடி-சைபர் கிரைம் போலீசார் விசாரணை

சேலத்தில் நூதன முறையில் 2 பேரிடம் ரூ.4 லட்சம் மர்ம நபர் மோசடி செய்தார். இதுகுறித்து சேலம் மாநகர -சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
.
.
Published on

சேலம்:

சேலம் பெரமனூர் நாகம்மாள் தோட்டம் நாராயணசாமி தெருவை சேர்ந்த சவுந்தரராஜன் மகன் சந்தோஷ்குமார் (வயது 29). இவரது நண்பர் கொடுத்த தகவலின் பேரில் கடந்த ஆண்டு இணையதளத்தில் 2,61,500 பணத்தை கூகுள்பே மூலம் முதலீடு செய்தார். 

விசாரணையில் அது போலியான முகவரி என்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

மற்றொரு சம்பவம்

இதேபோல் சேலம் சூரமங்கலம் ஜாகீர் அம்மா பாளையம் ஜீவாநகர் பகுதியை சேர்ந்தவர் சாகுல் அமீது (வயது 24). இவருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அபுபக்கர் என்பவர் வாட்ஸ் அப் மூலம் அறிமுகமாகி சாகுல் அமீதை உடனடியாக வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி அதற்கு மருத்துவ பரிசோதனை, விசா, போன்றவைகளை ஏற்பாடு செய்வதற்காக 1.20 லட்சம் பணத்தை அவர் குறிப்பிட்ட வங்கி கணக்கில் அனுப்பும்படி கேட்டுக் கொண்டார்.

இதை உண்மை என்று நம்பிய சாகுல் அமீது பணத்தை அனுப்பி வைத்தார். அதன்பிறகு அந்த நபரின் செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சாகுல்அமீது சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். 

இது தொடர்பாக இன்ஸ் பெக்டர் சந்தோஷ் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com