சங்கராபுரம் அருகே 2 பேரை அரிவாளால் வெட்டிய போலீஸ்காரர் கைது

யுவராஜ் (வயது29). இவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக அவரது மனைவி கல்கியிடம் விவாகரத்து கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார். 2 பேரையும் யுவராஜ் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
சங்கராபுரம் அருகே   2 பேரை அரிவாளால் வெட்டிய போலீஸ்காரர் கைது
Published on

கள்ளக்குறிச்சி:

சங்கராபுரம் அருகே மூரார்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் யுவராஜ் (வயது29). கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காராக பணிபுரிந்து வந்த இவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக அவரது மனைவி கல்கியிடம் விவாகரத்து கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார். சம்பவத்தன்று இது தொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

இதை தட்டிக் கேட்ட கல்கியின் அண்ணன் யுவராஜ் சர்மா, அதே பகுதியை சேர்ந்த முருகன் ஆகிய 2 பேரையும் யுவராஜ் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்த புகாரின் பேரில் யுவராஜ் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வந்த நிலையில் நேற்று கள்ளக்குறிச்சி அருகே உள்ள ரோடுமாமாந்தூரில் பேருந்து ஏற முயன்ற யுவராஜை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com