சித்ரா பவுர்ணமி கோவில்களில் சித்ரா பவுர்ணமி வழிபாடு

பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன், அரசாயி அம்மன், பரமேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலி
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன், அரசாயி அம்மன், பரமேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலி
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் அரசாயி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுதீபாராதனை காட்டப்பட்டது.  பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். 

முன்னதாக கோவிலில் திருக்கோடி விளக்கு ஏற்றப்பட்டது. அதேபோல் ஆனங்கூரில் உள்ள முத்துமாகாளிஅம்மன் கோவில், மாரியம்மன் கோவில், வடகரையாத்தூர் மாரியம்மன் கோவில், கொந்தளம் மாரியம்மன் கோவில், நன்செய் இடையாறு மாரியம்மன் கோவில், திருவேளீஸ்வரர் கோவில், ராஜா கோவில், பரமத்திவேலூர் மகா மாரியம்மன், 

பேட்டை புது மாரியம்மன், ஸ்ரீ ஹேரம்ப பஞ்சமுக விநாயகர், பகவதியம்மன், பரமத்தி அங்காளம்மன், பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவில், புதிய காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவில் மற்றும்பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. 

இதில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com