மாநிலக் கல்விக் கொள்கை குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும் கால அளவு நீட்டிப்பு- தமிழக அரசு தகவல்

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் உயர்மட்டக்குழு அமைத்து ஆணை.மாநில கல்விக் கொள்கை குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் மாவட்டங்களில் நடைபெறும்.
தமிழக அரசு
தமிழக அரசு
Published on

நாடு முழுவதும் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. தேசியக் கல்விக் கொள்கைக்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் தனித்துவமான (Distinct) மாநில கல்விக் கொள்கை வகுக்கும் நோக்கில் அரசு நடவடிக்கை மேற் கொண்டு, நீதியரசர் (ஓய்வு) த.முருகேசன், தலைமையில் ஓர் உயர்மட்டக்குழு அமைத்து ஆணையிட்டுள்ளது.

மாநிலக் கல்விக் கொள்கை சம்மந்தமாக பொதுமக்கள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், தனியார் கல்வி நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் ஆகியோரிடமிருந்து கருத்துருக்கள் மற்றும் ஆலோசனைகள் stateeducationpolicy@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்,

அல்லது Centre for Excellence Building,3வது தளம், களஞ்சியம் கட்டிடம் பின்புறம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை -600025 என்ற அலுவலக முகவரிக்கு 15.09.2022ஆம் தேதி வரை அனுப்பி வைக்கலாம்.

மாநிலக் கல்விக் கொள்கைக்குழு மேலும் கூடுதலாக ஒரு மாத காலம் நீட்டித்து 15.10.2022 ஆம் தேதி வரை கருத்துருக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற முடிவு செய்து அவ்வாறே கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது. மேலும் 20.09.2022 அன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மாநில கல்விக் கொள்கை குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறும்.

இதேபோல், 21.09.2022 அன்று மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களிலும் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறும். இதேபோல் திருவாரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் அக்டோபர் 3வது வாரம் மாநில கல்விக் கொள்கை குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com