அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கு ரத்து

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி கொடுத்த பாலியல் புகார் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.மன உளைச்சல் காரணமாக மணிகண்டன் எனக்கு ரூ.10 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என அந்த புகாரில் நடிகை சாந்தினி தெரிவித்திருந்தார்.
முன்னாள் அமைச்சர் மணிகண்டன்
முன்னாள் அமைச்சர் மணிகண்டன்
Published on

சென்னை:

நடிகை சாந்தினி கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பல்வேறு சட்டப்பிரிவின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், மன உளைச்சல் காரணமாக மணிகண்டன் எனக்கு ரூ.10 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும். மேலும் வீட்டு வாடகை, மருத்துவ செலவு உள்பட இடைக்கால நிவாரண தொகையாக மாதந்தோறும் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும் என அந்தப் புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு மணிகண்டன் தாக்கல் செய்த மனுவை முதலில் மாவட்ட கோர்ட்டு, பின்னர் சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனால் பெங்களூரில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். அவரை சென்னை அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து, அவர் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புகாரை திரும்பப் பெறுவதாக நடிகை சாந்தினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கை ரத்துசெய்து ஐகோர்ட் உத்தரவிட்டது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com