நெல்லை மாநகரில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 3 பேர் கைது

நெல்லை மாநகரில் விபத்துகள் ஏற்பட்டு உயிர்சேதங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக, விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.குடிபோதையிலும், அஜாக்கிரதையாகவும், வாகனம் ஓட்டுவோர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 308-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது.
நெல்லை மாநகரில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 3 பேர் கைது
Published on

நெல்லை:

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல்லை மாநகரில் விபத்துகள் ஏற்பட்டு உயிர்சேதங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக, விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக குடிபோதையிலும், அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் மற்றும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக வாகனம் ஓட்டியும், தான் செய்யும் செயல் மரணத்தை விளைவிக்க வாய்ப்புள்ளது எனத் தெரிந்தும் அவ்வாறு வாகனம் ஓட்டுவோர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 308-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களில் இவ்வாறு வாகனம் ஓட்டிய நெல்லை டவுன் நயினார் மகன் தினேஷ்குமார், நயினார் மகன் முத்து ஜெகன், கணபதி என்பவர் மகன் பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக இந்திய தண்டனை சட்டப் பிரிவு 308-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும் பள்ளி மாணவர்கள் மற்றும் சிறார்கள் பள்ளிகளுக்கோ, பொது இடங்களிலோ இருசக்கர வாகனங்களை ஓட்டி வருபவர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்கள் மற்றும் சிறார்களுக்கு இருசக்கர வாகனங்களை ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள், வாகன உரிமையாளர்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கை கள் மேற்கொள்ள நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

எனவே பொதுமக்கள் இதுகுறித்து விழிப்புணர்வுடன் செயல்பட்டு வாகனங்களை ஓட்ட அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com