முதலமைச்சர் தாயார் உடல் தகனம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் உடல் சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தாயார் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதலமைச்சர்
தாயார் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதலமைச்சர்
Published on

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93). சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதுகு வலிக்காக சிகிச்சை பெற்று வந்த அவர், மாரடைப்பு காரணமாக அதிகாலை 1 மணியளவில் காலமானார்.

தகவல் அறிந்து சேலம் புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தவுசாயம்மாளுக்கு பழனிசாமியுடன் கோவிந்தராஜ் என்ற மகனும் விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

முதலமைச்சரின் தாயார் உடலுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், உறவினர்களும் அஞ்சலி செலுத்தினர். அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com