ரூ.1½ கோடி மோசடி: நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் மீது வழக்கு

மும்பை தொழில் அதிபரிடம் ரூ.1½ கோடி மோசடி செய்த வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர்
நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர்
Published on

மும்பை :

மும்பையை சோ்ந்த தொழில் அதிபர் நிதின் பாரய் பாந்திரா போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

எஸ்.எப்.எல். பிட்னஸ் நிறுவன இயக்குனர் காசிப்கான், நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ்குந்த்ரா உள்ளிட்டவர்கள் தங்கள் நிறுவனத்தில் ரூ.1 கோடியே 51 லட்சத்தை முதலீடு செய்யுமாறு என்னிடம் கூறினர். இதற்காக எஸ்.எப்.எல். பிட்னஸ் நிறுவனத்தின் சார்பில் புனேயில் உள்ள ஹடாப்சர் மற்றும் கோரேகான் பகுதிகளில் ஜிம், ஸ்பா திறந்து தருவதாக அவர்கள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து நான் பணத்தை முதலீடு செய்தேன். ஆனால் சொன்னது போல அவர்கள் செய்யவில்லை. மேலும் என்னிடம் பெற்ற பணத்தை திருப்பித் தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டபோது, என்னை மிரட்டினார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த புகாரை அடுத்து போலீசார் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஷில்பா ஷெட்டி இந்த குற்றச்சாட்டை மறுத்து வருத்தம் தெரிவித்து உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com