

சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.
தங்கம் விலையானது நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,05,200-க்கும், கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.13,150-க்கு விற்பனையானது. நேற்று சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,04,800-க்கும், கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,100-க்கு விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.1,05,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.13,135-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
17-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800
16-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,200
15-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,440
14-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,200
13-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,600
17-07-2026- ஒரு கிராம் ரூ.235
16-07-2026- ஒரு கிராம் ரூ.240
15-07-2026- ஒரு கிராம் ரூ.240
14-07-2026- ஒரு கிராம் ரூ.235
13-07-2026- ஒரு கிராம் ரூ.240