GOLD PRICE TODAY: தொடர் சரிவில் தங்கம்: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.
Gold
Published on

சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.

தங்கம் விலையானது நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,05,440-க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,180-க்கும் விற்பனையானது. நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,05,200-க்கும், கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.13,150-க்கு விற்பனையானது.

தங்கம் விலை சரிவு

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,04,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Silver

வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

16-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,200

15-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,440

14-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,200

13-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,600

12-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

16-07-2026- ஒரு கிராம் ரூ.240

15-07-2026- ஒரு கிராம் ரூ.240

14-07-2026- ஒரு கிராம் ரூ.235

13-07-2026- ஒரு கிராம் ரூ.240

12-07-2026- ஒரு கிராம் ரூ.240

X

Maalai Malar
www.maalaimalar.com