GOLD PRICE TODAY: சற்றே உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.
Gold
Published on

சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.

தங்கம் விலையானது நேற்று முன்தினம் சரிவை கண்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.100 குறைந்து ரூ.13 ஆயிரத்து 200-க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது. நேற்று சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,05,200-க்கும், கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,150-க்கு விற்பனையானது.

தங்கம் விலை உயர்வு

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,05,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,180-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

14-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,200

13-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,600

12-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400

11-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400

10-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,800

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

14-07-2026- ஒரு கிராம் ரூ.235

13-07-2026- ஒரு கிராம் ரூ.240

12-07-2026- ஒரு கிராம் ரூ.240

11-07-2026- ஒரு கிராம் ரூ.240

10-07-2026- ஒரு கிராம் ரூ.245

X

Maalai Malar
www.maalaimalar.com