GOLD PRICE TODAY: தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.
Gold
Published on

சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2 நாட்களாக ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 300-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலையானது நேற்று சரிவை கண்டது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.100 குறைந்து ரூ.13 ஆயிரத்து 200-க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது.

தங்கம் விலை நிலவரம்

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,05,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை சரிவு

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

13-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,600

12-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400

11-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400

10-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,800

09-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,560

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

13-07-2026- ஒரு கிராம் ரூ.240

12-07-2026- ஒரு கிராம் ரூ.240

11-07-2026- ஒரு கிராம் ரூ.240

10-07-2026- ஒரு கிராம் ரூ.245

09-07-2026- ஒரு கிராம் ரூ.245

X

Maalai Malar
www.maalaimalar.com