

தங்கம் விலை கடந்த 7-ந்தேதி வரை குறைந்து வந்த நிலையில், 8-ந்தேதியில் இருந்து 10-ந்தேதி வரை விலை அதிகரித்து வந்தது.
அதன்படி, 10-ந்தேதி ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 350-க்கும், ஒரு சவரன் ரூ. 1 லட்சத்து 6 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது. 11-ந்தேதி கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 300-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 400-க்கும் விற்கப்பட்டது. நேற்று ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 300-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,05,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.13,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
12-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400
11-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400
10-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,800
09-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,560
08-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,600
12-07-2026- ஒரு கிராம் ரூ.240
11-07-2026- ஒரு கிராம் ரூ.240
10-07-2026- ஒரு கிராம் ரூ.245
09-07-2026- ஒரு கிராம் ரூ.245
08-07-2026- ஒரு கிராம் ரூ.245