எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்கறிஞர்களாக செயல்படலாமா? பார் கவுன்சில் நோட்டீஸ்

எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்களாக உள்ளவர்கள் வழக்கறிஞர்களாக செயல்படலாமா? என்று 500 பேருக்கு இந்திய பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்கறிஞர்களாக செயல்படலாமா? பார் கவுன்சில் நோட்டீஸ்
Published on

புதுடெல்லி:

இந்திய பார் கவுன்சில் நியமனம் செய்த நிபுணர்கள் குழுவானது பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர் பணியை தொடரலாமா என்பது தொடர்பாக முடிவு எடுக்க உள்ளது.  இதுதொடர்பாக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள் என 500 பேருக்கு இந்திய பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நோட்டீஸ் பெற்றவர்கள் ஒரு வாரத்திற்குள் அவர்களுடைய பதிலை தெரிவிக்க வேண்டும். இவ்விவகாரம் தொடர்பாக இறுதி விசாரணையானது ஜனவரி 22-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களில் பலர் சட்டம் படித்த வழக்கறிஞர்களாக உள்ளனர். தங்களது பணி போக, இவர்கள் வழக்குகளில் ஆஜராகின்றனர். இதனை தடுக்க வேண்டும் என பா.ஜ.க தலைவர் அஷ்வினி உபாத்யா, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அரசு மற்றும் பொதுத்துறைகளில் பணியாற்றி ஊதியம் பெரும் ஒருவர் வழக்கறிஞராக செயல்பட கூடாது என்று 1996-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை பின்பற்றி மேற்கண்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கடித்தத்தில் குறிப்பிட்டிருந்ததோடு, இதன் நகலை இந்திய பார் கவுன்சிலின் தலைவருக்கும் அனுப்பியிருந்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com