காற்று மாசு விவகாரம்- 4 மாநில தலைமை செயலாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவு

காற்று மாசுவை கட்டுப்படுத்த தவறியது தொடர்பான வழக்கில் டெல்லி உள்ளிட்ட 4 மாநில தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராகும்படி உச்ச நீதிமன்றம் மீண்டும் சம்மன் அனுப்பியது.
டெல்லியை அச்சுறுத்தும் காற்று மாசு
டெல்லியை அச்சுறுத்தும் காற்று மாசு
Published on

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து மோசமான நிலையிலேயே உள்ளது. அண்டை மாநிலங்களான பஞ்சாப், அரியானா  போன்ற மாநிலங்களில் பயிர்க் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் புகை, பனியுடன் சேர்ந்து பரவி வருவதால் நிலைமை மோசமாகி வருகிறது. டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த வாகனங்களை இயக்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் நிலைமையில் மாற்றம் ஏற்படவில்லை.

காற்று மாசு அதிகரிப்பு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சம்பந்தப்பட்ட மாநில தலைமைச் செயலாளர்களை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது.

இந்நிலையில், இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் வரும் 29-ம் தேதிக்குள் நேரில் ஆஜராகும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

டெல்லி-என்.சி.ஆர். பகுதிகளில் காற்று மாசுபாடு அளவை குறைப்பதற்கும், பயிர்க்கழிவுகளை எரிப்பதை தடுப்பதற்கும் மாநில அரசுகள் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டன என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com