ஆப்கானிஸ்தான் - பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் 64 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

ஆப்கானிஸ்தான் நாட்டின் மூன்று மாகாணங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய 24 மணிநேர தேடுதல் வேட்டையில் 64 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #militantskilled #Afghanmilitants #Talibanskilled
ஆப்கானிஸ்தான் - பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் 64 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
Published on

காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டு வடக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.

பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசார் ஆகியோரை கொண்ட கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.

பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்களை குறிவைத்து ராணுவம் மற்றும் போலீசார் அடங்கிய சிறப்பு பாதுகாப்பு படையினர் நாடு முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தரை மார்க்கமாகவும் வான்வழியாகவும் பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்கள் மீது குண்டுகள் வீசப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் கிழக்கு காஸ்னி மாகாணத்தில் 7 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இதேபோல், டக்கார் மாகாணத்தில் 5 பயங்கரவாதிகளும், ஸாபுல் மாகாணத்தில் 28 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

கிழக்கு வர்டாக் மாகாணத்தில் 17 பயங்கரவாதிகளும், தெற்கு உருஸ்கான் மாகாணத்தில் 7 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #militantskilled  #Afghanmilitants #Talibanskilled 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com