ரெடியா?.. வெளியாகிறது 'தி ஒடிஸி' மேக்கிங் வீடியோ - எந்த ஓடிடியில் தெரியுமா?

ஜூலை 17 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது
தி ஒடிஸி
தி ஒடிஸி
Published on

ஹோமரின் மகாகவியமான ஒடிஸியை தழுவி ஹாலிவுட்டின் ஜாம்பவான் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் 'தி ஒடிஸி' படத்தை இயக்கியுள்ளார்.

நோலன்

‘பேட்மேன்: தி டார்க் நைட்’, ‘இன்டர்ஸ்டெல்லார்’, ‘இன்செப்ஷன்’, ‘தி பிரெஸ்டீஜ்’ உள்ளிட்ட படங்கள் மூலம் உலகை பிரிமிக்க வைத்த நோலன் கடைசியாக அணுகுண்டை தயாரித்த ஓபன்ஹைமரின் வாழ்வை தழுவி அவரது பெயரில் சிலியன் மர்பியை வைத்து படம் இயக்கியிருந்தார். இப்படம் கடந்த வருட ஆஸ்காரில் பல விருதுகளை வென்றது.

ஒடிஸி

இந்நிலையில் தி ஒடிஸி மூலம் புராண கதையில் நோலன் களமிறங்கியுள்ளார்.

கிரேக்கப் புராணத்தில், டிரோஜன் போர் முடிவடைந்த பிறகு, இத்தாக்காவின் மன்னரான 'ஒடிஸியஸ்' தனது ராஜ்ஜியத்திற்கு திரும்புவதற்காக மேற்கொள்ளும் அபாயகரமான பயணமே இப்படத்தின் கதையாகும்.

நடிகர்கள்

இதில் பிரபல ஹாலிவுட் நடிகர்களான மெட் டாமன், டாம் ஹாலண்ட், ஜெண்ட்யா, அண்ணா ஹாத்வே, எலியாட் பேஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

மாட் டேமன் ஒடிஸியஸாகவும், ஆன் ஹேத்வே அவரது மனைவி பெனிலோப்பாகவும் நடித்துள்ளனர். மகனாக டாம் ஹாலண்ட் நடித்துள்ளார்.

ஐமாக்ஸ்

முழுக்க முழுக்க ஐமேக்ஸ் கேமராக்களால் படமாக்கப்பட்ட தி ஒடிஸி ஜூலை 17 அன்று திரையரங்குகளில் வெளியாகி உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளது.

படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது.

இதனிடையே படத்தின் ப்ரோமோஷனை ஒட்டி கிறிஸ்டோபர் நோலன், மெட் டாமன், டாம் ஹாலண்ட் உள்ளிடோர் அண்மையில் இந்தியா வந்திருந்தனர். மும்பையில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடந்தது.

மேக்கிங் வீடியோ

அதிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இப்பபடத்தின் ப்ரோமோஷனின் ஒரு பகுதியாக படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாக உள்ளது.

இதன் வெளியீட்டு உரிமையை ஹாட்ஸ்டார் கைப்பற்றியுள்ளது. நாளை (ஜூலை 14) அந்த தளத்தில் தி ஒடிஸி மேக்கிங் வீடியோ வெளியாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com