ரசிகர்களின் எதிர்பார்ப்பில் 'மா இன்டி பங்காரம்': ஓடிடி ரிலீஸ் தேதி மற்றும் தளம் இதோ!

‘மா இன்டி பங்காரம்’ திரைப்படம் வெளியான 22 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் முதல் நாளிலேயே சுமார் ரூ.13 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மா இன்டி பங்காரம்
Published on

நடிகை சமந்தா தயாரித்து, முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'மா இன்டி பங்காரம்'. தெலுங்கில் உருவான இப்படம் தமிழில் டப் செய்து 'எங்கள் தங்கம்' என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு சமந்தா ஆக்ஷன் கதைக்களத்தில் இறங்கியுள்ளதால், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்தப் படத்தில் கவுதமி, மஞ்சுஷா, திகந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரூ.100 கோடி வசூல்

‘மா இன்டி பங்காரம்’ திரைப்படம் வெளியான 22 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் முதல் நாளிலேயே சுமார் ரூ.13 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படம் விரைவில் ரூ.200 கோடி வசூலை ஈட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு சினிமா வரலாற்றில் பெண் நாயகி படங்களில் அதிகம் வசூலித்து, முதலிடத்தைப் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஓடிடி

இதனிடையே, ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படம் வரும் 17-ந்தேதி ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது. ஜியோ ஹாட் ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் கண்டு களிக்கலாம்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com