ஆர்த்தி குடும்பத்தை “என் குடும்பம்” என்று குறிப்பிட்ட குஷ்பு | வைரல் புகைப்படம்

ஆர்த்தி மகன்கள் மற்றும் தனது மகள்களோடு குஷ்பு எடுத்த புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வைரலாகியுள்ளது.
ஆர்த்தி குடும்பத்தை “என் குடும்பம்” என்று குறிப்பிட்ட குஷ்பு | வைரல் புகைப்படம்
Published on

நடிகர் ரவி மோகனும் ஆர்த்தியும் கடந்த 2009ம் ஆண்டு குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

அதன்பிறகு தனது மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரை பிரிந்து, பாடகி கெனிஷா பிரான்சிஸ் என்பவருடன் ரவி மோகன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த வாரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட கெனிஷா, தான் சென்னையை விட்டு வெளியேறுவதாகவும் மேலும் தான் அதிகமாக நேசித்த இசையை விட்டு விலகுவதாகவும் பகிர்ந்திருந்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ரவி மோகன், தனது குடும்பத்தில் ஏற்பட்ட பிளவுக்கு இட்லி நடிகை தான் காரணம் என்று மறைமுகமாக நடிகை குஷ்புவை குறிப்பிட்டார்.

தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள குஷ்பு, ஆர்த்தியையும் அவரது குழந்தைகளையும் “என் குடும்பம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்ஸ்டாவில் தனது மகள்கள் மற்றும் ஆர்த்தி மகன்கள், தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் ஆகியோருடன் குஷ்பு எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com