

ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ளப் படம் ஜன நாயகன். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு, அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸுக்கு தயாரான இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்னையில் சிக்கி தற்போதுவரை வெளியாகவில்லை. இதனிடையே முழு படமும் இணையத்திலும் வெளியானது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடந்துவருகிறது.
விஜய்யின் கடைசிப் படம் இது என கூறப்பட்டதால், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு வைத்திருந்து ஏமாந்து போயினர். இந்நிலையில் ஒருவழியாக மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ஜனநாயகன் படத்திற்கு இன்று ‘ஏ’சான்றிதழ் வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனைத்தொடர்ந்து படம் வரும் ஜூலை.24ம் தேதி வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.