CSK போட்டியை கண்டுகளிக்கும் AK & SK

ஐ.பி.எல். தொடரின் 43ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
CSK போட்டியை கண்டுகளிக்கும் AK & SK
Published on

ஐ.பி.எல். தொடரின் 43ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். சி.எஸ்.கே அணி அதிரடியான விளையாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சென்னையில் நடக்கும் இந்த போட்டியை நடிகர் மற்றும் ரேசரான அஜித் குமார் அவருடைய மனைவி ஷாலினி மற்றும் அவரது மகன் ஆத்விக் மகள் - அனுஷ்கா உடன் வந்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சேப்பாக் மைதானத்தில் இரு தல-யை பார்ப்பதற்கு ரசிகர்களுக்கு மிகவும் சந்தோஷமும் ஆரவாரத்துடன் பார்த்து வருகின்றனர். மேலும் தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயனும் அஜித்துடன் இணைந்து போட்டியை கண்டுகளிக்க வந்துள்ளார். இப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com