ராகவா லாரன்ஸ்-லோகேஷ் கூட்டணியின் 'பென்ஸ்' பட லேட்டஸ்ட் அப்டேட்!

நடிகர் ரவி மோகன் இப்படத்தில் ஒரு முக்கியப் பாத்திரத்தில் இணைந்துள்ளார்.
benz movie update
Published on

லோகேஷ் கனகராஜின் 'லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்' கதைக் களத்தின் கீழ் உருவாகி வருவதால், அறிவிக்கப்பட்ட நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் 'பென்ஸ்'.

'ரெமோ' பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த மிகவும் விறுவிறுப்பான புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, 'பென்ஸ்' திரைப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பில் 50 சதவீத காட்சிகள் தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் மலையாள நடிகர் நிவின் பாலி மற்றும் முன்னணி நடிகர் ரவி மோகன் சம்பந்தப்பட்ட முக்கியக் காட்சிகள் முழுமையாகப் படமாக்கப்பட்டு, அவர்களின் பகுதிக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இப்படத்தில் நிவின் பாலி 'வால்டர்' என்ற மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பதாக ஏற்கனவே வெளியான கேரக்டர் ப்ரோமோ சமூக வலைத்தளங்களில் பெரும் அலையை ஏற்படுத்தியிருந்தது. அதேபோல், நடிகர் ரவி மோகனும் இப்படத்தில் ஒரு முக்கியப் பாத்திரத்தில் இணைந்துள்ளார்.

தற்போது இவர்களின் பகுதிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த கட்டப் படப்பிடிப்பு முற்றிலும் கதாநாயகனான ராகாவா லாரன்ஸ் நடிக்கும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளை மையமாக வைத்து நடத்தப்பட உள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.

ஜி ஸ்குவாட், பேசியன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு, இளம் இசைப் புயல் சாய் அபியங்கர் இசையமைக்கிறார். பிலிமின் ராஜ் படத்தொகுப்பு பணிகளையும், கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவையும் மேற்கொண்டு வருகின்றனர்.

பாதி படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதால், விரைவில் இப்படத்தின் அடுத்தடுத்த டீசர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com