என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
38 வயது இளைஞரின் உடல் அமைப்பு கொண்ட 61 வயது முதியவர்
- கடுமையான உடற்பயிற்சி, கட்டுப்பாடான உணவு வகைகள் தான் தனது ஆரோக்கியத்துக்கு முக்கிய காரணம் என்றார்.
- பெரும்பாலான நேரங்களில் எளிய கார்போ ஹைட்ரேட்டுகளை கட்டுப்படுத்துவது மூலம் நான் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டேன் எனவும் குறிப்பிடுகிறார்.
உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு போன்ற பழக்கங்களை தொடர்ந்து கடைபிடிப்பதன் மூலம் வயதானாலும் சிலருக்கு உடல் தோற்றத்தில் முதிர்ச்சி தெரிவதில்லை. இதை நிரூபிக்கும் வகையில் அமெரிக்காவின் மெக்சிகன் பகுதியை சேர்ந்த 61 வயதான டேவ் பாஸ்கோ என்ற முதியவர் தனக்கு 38 வயது இளைஞருக்கான உடல் அமைப்புடன் இளமையாக தோன்றுவதாக கூறி கவனத்தை ஈர்த்துள்ளார்.
அவர் கூறுகையில், கடுமையான உடற்பயிற்சி, கட்டுப்பாடான உணவு வகைகள் தான் தனது ஆரோக்கியத்துக்கு முக்கிய காரணம் என்றார். மேலும், என்னுடைய நேரம் எனக்கு முக்கியமானது. அதனால் நான் அதை திட்டமிடுகிறேன். மற்றவர்களுடன் தரமான நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்பை நான் இழக்க மாட்டேன் என்றார்.
ஆர்கானிக் உணவு வகைகள் மற்றும் மாட்டிறைச்சி, கோழி, மீன் உணவு வகைகளும், காய்கறிகளையும் அதிகம் சாப்பிடுவதாக கூறும் டேவ் பாஸ்கோ பெரும்பாலான நேரங்களில் எளிய கார்போ ஹைட்ரேட்டுகளை கட்டுப்படுத்துவது மூலம் நான் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டேன் எனவும் குறிப்பிடுகிறார்.