என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
அடுத்த ஜனாதிபதி யார்? - இன்று வாக்கு எண்ணிக்கை
- ஜனாதிபதி தேர்தல் கடந்த 18-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.
- துணை ஜனாதிபதி தேர்தல் ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறுகிறது.
புதுடெல்லி:
நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்தது. இதில், பா.ஜ.க. வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கும் இடையேதான் போட்டி.
தலைநகர் டெல்லியில் பாராளுமன்ற வளாகம் மற்றும் மாநிலங்களில் சட்டசபை வளாகங்கள் என 31 இடங்களில் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி, வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.
இந்தத் தேர்தலில் வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்ததைத் தொடர்ந்து ஓட்டு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டன. ஒவ்வொரு இடத்தில் இருந்தும் விமானத்தில் 'மிஸ்டர் பேலட் பாக்ஸ்' என்ற பெயரில் முன்பகுதி இருக்கையில், உதவி தேர்தல் அதிகாரியின் பாதுகாப்பு, கண்காணிப்புடன் ஓட்டு பெட்டிகள் டெல்லி எடுத்துச்செல்லப்பட்டுள்ளன. இமாசல பிரதேசத்தில் இருந்து மட்டும் சாலை மார்க்கமாக ஓட்டு பெட்டி டெல்லிக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
இந்நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன்மூலம் நாட்டின் அடுத்த ஜனாதிபதி யார் என்பது தெரிந்துவிடும்.